Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

புதிய வகை கையடக்க தொலைபேசி அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம்

புதிய வகை கையடக்க தொலைபேசி அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம்

6 ஆவணி 2024 செவ்வாய் 10:06 | பார்வைகள் : 5195


ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை வெளியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, ஆப்பிளின் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசி யோசனை மிகவும் மேம்பட்டது என்றும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள விநியோகஸ்தர்களுடன் இணைந்து அதற்கான உதிரிபாகங்களை உருவாக்கி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் அல்லது பழைய கிளாம்ஷெல் ஃபிளிப் (Samsung Galaxy Z Flip or old clamshell flip phone) போன்று அதன் அகலம் முழுவதும் மடிந்துவிடும் என்று கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கையடக்க தொலைபேசி 2026ல் சந்தைக்கு வந்தால், சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய போனை அறிமுகப்படுத்தி 7 வருடங்கள் ஆகிவிடும்.

இந்த ஆண்டு ஐபோன் 16 வரிசைக்கு, AI அம்சங்கள் மற்றும் புதிய கேமராவில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு மே மாதத்தில் பெறப்பட்ட Counterpoint Research அறிக்கைகளின்படி, முதல் காலாண்டில் உலகளாவிய மடிக்கக்கூடிய  ஸ்மார்ட்போன் சந்தை 49% வளர்ச்சியடைந்துள்ளது.

இந்நிலைமை காரணமாக, 2026 ஆம் ஆண்டளவில்,  ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய  தொலைபேசியை கணிசமாக நிறுவப்பட்ட சந்தையில் நுழைவது மிகவும் சாதகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்