ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்
6 ஆவணி 2024 செவ்வாய் 09:55 | பார்வைகள் : 2211
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.
இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளதுடன், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் லெபனானில் செய்யப்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தைக் குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் , தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.