Paristamil Navigation Paristamil advert login

தொடர்ந்தும் செய்ன் நதி இரத்து!

தொடர்ந்தும் செய்ன் நதி இரத்து!

6 ஆவணி 2024 செவ்வாய் 09:54 | பார்வைகள் : 7343


இன்று செவ்வாய்க்கிழமையும் ஐந்தாவது தடவையாக செய்ன் நதியில் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்கள் செய்ன் நதியின் நீர் அசுத்தமானது எனக் காரணங்காட்டி பங்கெடுக்க மறுத்துள்ளனர்.

இன்று நடக்க இருந்த நீச்சல் போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் இதனை இரத்துச் செய்துள்ளனர்.

பிரான்சின் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள், செய்ன் நதியின் நீரைப் பகுப்பாய்வு செய்யாமல் போட்டிகளை அனுமதித்தமை, பிரான்சின் தகமைகளைக் கேள்விக்குள்ளாகி உள்ளது.

ஒலிம்பிக் ஆரம்பித்ததில் இருந்து நான்கு திரியோத்லோன் போட்டிகளின் பயிற்சிகளும் இரத்துச் செய்யப்பட்டதுடன் ஆண்களின் திரியோத்லோன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்