Paristamil Navigation Paristamil advert login

கடல் அலைகளில் சாகசம் - தங்கம் வென்ற பிரான்ஸ்..!

கடல் அலைகளில் சாகசம் - தங்கம் வென்ற பிரான்ஸ்..!

6 ஆவணி 2024 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 5218


Surfing என அழைக்கப்படும் கடல் அலைகளில் சாகச விளையாட்டுக்காக பிரான்ஸ் தங்கம் வென்றுள்ளது. பிரான்சுக்கு கிடைத்துள்ள 13 ஆவது தங்கம் இதுவாகும்.

பிரெஞ்சு போல்னேசியா தீவுக்கூட்டங்களில் ஒன்றான Tahiti இல் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது. பிரெஞ்சு வீரர் K. Vaast இந்த தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார்.

அதேவேளை, இதே விளையாட்டில் பெண்கள் பிரிவில் ஒரு வெண்கல பதக்கமும் பிரான்சுக்கு கிடைதுள்ளது. Johanne Defay இந்த பதக்கத்தினை வென்றிருந்தார்.

நேற்று ஓகஸ்ட் 5, திங்கட்கிழமை நாள் முடிவில் 13 தங்கங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 48 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.



(புகைப்படத்தில் இருப்பவர் வீராங்கணை Johanne Defay)

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்