ரஷ்யாவின் குரில் தீவில் பாரிய நிலநடுக்கம்

2 புரட்டாசி 2023 சனி 09:31 | பார்வைகள் : 10222
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் குரில் தீவில் 02.09.2023 அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
142 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கிய நிலையில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.