ரஷ்யா பிராந்தியமான தைவாவில்அவசரகால நிலை அறிவிப்பு

6 ஆவணி 2024 செவ்வாய் 04:00 | பார்வைகள் : 6350
ரஷ்ய பிராந்தியமான தைவாவில் காட்டுத்தீ காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tyva பிராந்தியத்தில் காட்டுத்தீ பரவி வருவதனால் அங்கு அதிகாரிகள் பிராந்திய அவசரகால நிலையை அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிராந்திய ஆளுநர் Vladislav Khovalyg கூறுகையில், "நீடித்த வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையின் விளைவாக Piykhemsky, Chedi-Kholsky மற்றும் Tandinsky மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. தீ சுமார் 7.7 சதுர மைல் பரப்பளவை சூழ்ந்துள்ளது" என தெரிவித்தார்.
மேலும் அவர், காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுவதற்கு அண்டை பிராந்தியங்களில் உதவி கோரியுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள சில பிராந்தியங்கள் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட நிலையில், தைவாவும் அதில் ஒன்றாக இணைந்துள்ளதாக மத்திய வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025