இஸ்ரேலில் கத்திகுத்து தாக்குதல் - இருவர் பலி
5 ஆவணி 2024 திங்கள் 11:37 | பார்வைகள் : 7715
இஸ்ரேலின் ஹொலொன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்குகரையை சேர்ந்த நபர் ஒருவரே இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
66வயது யூத பெண் ஒருவரும் 80 வயது ஆணும் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நான் எனது நாயுடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை நபர் ஒருவர் ்கதஒடிவந்து முதுகில் கத்தியால் குத்தினார் என காயமடைந்த 26 வயது நபர் தெரிவித்துள்ளார்.
நான் பேருந்து தரிப்பிடத்தை நோக்கி தப்பிச்சென்றேன் கத்திக்குத்திற்கு மேலும் பலர் இலக்கானது அதன் பின்னரே எனக்கு தெரியவந்தது என அந்த நபர் தெரிவித்துள்ளார்.
ஹெலொனில் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை இஸ்ரேலிய பிரதமர் அமைச்சரவை கூட்டத்தில் உறுதி செய்துள்ளார்.
மேலும் இந்த கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan