Paristamil Navigation Paristamil advert login

ஒட்டாவாவில் கோர விபத்து -  2 பேர் பலி

ஒட்டாவாவில் கோர விபத்து -  2 பேர் பலி

5 ஆவணி 2024 திங்கள் 07:45 | பார்வைகள் : 6600


ஒட்டாவாவின் 416ம் மற்றும் 417ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த வாகன விபத்து தொடர்பில் ஒன்றாறியோ மாகாண பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்த விட்டார் எனவும் படுகாயம் அடைந்த ஏனைய சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக இந்த மோட்டார் சைக்கிள்கள் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்தினை தொடர்ந்து 416 மற்றும் 417 இலக்க அதிவேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்