Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் நாட்டால் உலகத்துக்கு பேராபத்து - ஈரான்  எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டால் உலகத்துக்கு பேராபத்து - ஈரான்  எச்சரிக்கை

4 ஆவணி 2024 ஞாயிறு 08:19 | பார்வைகள் : 5938


இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால் உலகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று ஈரான் எசச்சரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய கிழக்கு பகுதி மட்டுமின்றி, உலகத்திற்கே ஆபத்து என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி பாகரி கனி எச்சரித்துள்ளதுடன் கடந்த பத்து மாதங்களில்,

இஸ்ரேல் - காஸா பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் இப்போது இஸ்ரேலின் குற்றங்கள் பெய்ரூட், தெஹ்ரான் மற்றும் ஏமன் வரை விரிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்