மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றம் - இஸ்ரேல் மீது சரமாரியாக தாக்குதல்

4 ஆவணி 2024 ஞாயிறு 05:37 | பார்வைகள் : 5680
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) மற்றும் அதற்கு சற்று முன்னதாக பெய்ரூட்டில் லெபனானின் ஈரான் ஆதரவு போராளி குழுவின் தளபதி Fuad Shukr ஆகிய இருவரையும் இஸ்ரேலிய படைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்தனர்.
இதையடுத்து இதற்கான பதிலடியை சரியான நேரத்தில், சரியான இடத்தில் நிச்சயமாக இஸ்ரேலுக்கு வழங்குவோம் என்று ஈரானின் புரட்சிகர காவலர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
ஒருவேளை ஈரான் பதிலடி தாக்குதலை முன்னெடுத்தால், அதற்கு லெபனானின் Hezbollah அமைப்பும் உறுதுணையாக இருக்க கூடும் என்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது தற்போது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Hezbollah அமைப்பு ஏவியுள்ள இந்த தாக்குதலில் குறைந்தது 50 ராக்கெட்டுகள் ஏவப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
அதே சமயம் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் அனைத்தையும் இஸ்ரேலின் அயர்ன் டோம்(Iron Dome) மிகவும் திறமையாக செயல்பட்டு தடுத்து நிறுத்தி வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025