'கோட்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
6 புரட்டாசி 2024 வெள்ளி 12:49 | பார்வைகள் : 5707
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தை விட 40 கோடி குறைவாக ’கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இருப்பதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய் ’கோட்’ திரைப்படம் நேற்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
’கோட்’ திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 38.3 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தெரிகிறது. கேரளாவில் 5.80து கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவில் மட்டும் இந்த படம் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாகவும் ஓவர் சீஸ் வசூலை சேர்த்தால் இந்த படம் முதல் நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 140 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பார்த்தால் ‘லியோ’வை விட ‘கோட்’ முதல் நாளில் ரூ.40 கோடி குறைவாக வசூல் செய்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan