Paristamil Navigation Paristamil advert login

கென்யாவில்  பாரிய  தீ விபத்து -  17 பலி

கென்யாவில்  பாரிய  தீ விபத்து -  17 பலி

6 புரட்டாசி 2024 வெள்ளி 08:16 | பார்வைகள் : 5102


ஆப்பிரிக்க நாட்டிலுள்ள கென்யா பாடசாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 பேர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்