Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் நீச்சல் தடாகங்கள்! - அனைவருக்கும் இலவசம்!!

பரிஸ் நீச்சல் தடாகங்கள்! - அனைவருக்கும் இலவசம்!!

5 புரட்டாசி 2024 வியாழன் 15:01 | பார்வைகள் : 9455


தலைநகர் பரிசில் உள்ள அனைத்து நீச்சல் தடாகங்களும் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் இலவசமாக்கப்பட்டுள்ளன. 

ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்று வரும் இந்த தருணத்தில், பரிஸ் நகரசபை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பரிசில் உள்ள அனைத்து பொது நீச்சல் தடாகங்களையும் கட்டணங்கள் இன்றி பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை வரை உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், பரிசில் உள்ள 15 இடங்களில் காலை 10 மணி முதல் 11 மணி வரை பல்வேறு நீச்சல் விளையாட்டுகளை ஒழுங்கமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்