உக்ரைனில் அமைச்சர்களின் திடீர் முடிவு - ஜெலென்ஸ்கி அரசாங்கத்தின் கதி

4 புரட்டாசி 2024 புதன் 14:34 | பார்வைகள் : 9210
உக்ரைனில் 6 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஜனாதிபதி உதவியாளர் பணியை விட்டு நீக்கப்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்து உக்ரைனிய அரசியலில் மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது.
ஆயுத உற்பத்திக்கு பொறுப்பாளரான மூலோபாய தொழில்துறை அமைச்சர் Oleksandr Kamyshin செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெளியேறியவர்களில் ஒருவர் ஆவார். ஆனால் அதே சமயம் தற்காப்பு துறையில் மற்றொரு பங்கை எடுக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், துணை பிரதமர் Olha Stefanishyna, நீதி, சுற்றுச்சூழல் மற்றும் மறு ஒருங்கிணைப்பு அமைச்சர்களும், சொத்து நிதியத்தின் தலைவர் Vitaliy Koval ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இதையடுத்து உக்ரைனிய அமைச்சரவையில் 3ல் ஒரு பங்கு காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு உக்ரைனிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெலென்ஸ்கி கடந்த வாரம் அமைச்சரவையில் பெரிய மறுசீரமைப்பு குறித்து திட்டமிட்டு இருந்தார்.
அத்துடன் ஜெலென்ஸ்கியின் வழக்கமான மாலை நேர உரையிலும் அமைச்சரவை மாற்றத்தின் தேவையை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர்களின் இந்த ராஜினாமா மற்றும் பதவி நீக்க நடவடிக்கைகள் அரங்கேறியுள்ளது.
அதில் இலையுதிர் காலம் உக்ரைனுக்கு மிக முக்கியமானது, எனவே உக்ரைனுக்கு தேவையான அனைத்து முடிவுகளையும் திடமாக எடுக்கும் அரசை கட்டமைக்க வேண்டும், அதனடிப்படையில் மாற்றங்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025