Paristamil Navigation Paristamil advert login

ஸ்ரீதேவிகூட நடிக்காதது ஏன் பாலைய்யா கூறிய அதிர்ச்சி தகவல்...

ஸ்ரீதேவிகூட நடிக்காதது ஏன்  பாலைய்யா கூறிய அதிர்ச்சி தகவல்...

3 புரட்டாசி 2024 செவ்வாய் 13:55 | பார்வைகள் : 4067


50வது வருட திரையுலக பயணத்தை கொண்டாடினர் பிரபல நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் ஒரு பெட்டியில் பங்கேற்று பேசிய நடிகர் பாலைய்யா, தான் ஏன் இறுதி வரை பிரபல நடிகை ஸ்ரீதேவியோடு இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவே இல்லை என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்றால் திரையுலக அழகியாக வலம்வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று 3 மொழிகளிலும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வந்தவர் அவர். இன்னும் சொல்லப்போனால் என்டிஆர், நாகேஸ்வர ராவ் மற்றும் கிருஷ்ணா என பழைய தலைமுறை ஹீரோக்களோடு நடிக்க துவங்கி, வெங்கடேஷ், சிரஞ்சீவி, நாகார்ஜுனா என இரண்டாம் தலைமுறை ஹீரோக்களோடும் பல படங்களில் இணைந்து நடித்தவர் அவர்.

ஆனால் அந்த வகையில் NTRரின் வாரிசான பிரபல நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவுடன் மட்டும் அவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இந்நிலையில் தனது 50 வருட கலைப்பயணத்தை கொண்டாடும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், திரைப்படம் மற்றும் அரசியல் மட்டுமின்றி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக ஸ்ரீதேவியுடன் ஏன் நடிக்கவில்லை என்பதும் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

பாலகிருஷ்ணா கூறியதாவது.. "ஸ்ரீதேவியுடன் நடிக்காததற்கு காரணங்கள் என்று தனியாக எதுவும் இல்லை. அது முற்றிலும் தற்செயலாக நடந்தது தான்.. எந்தத் ஒரு திரைப்படத்திலும் அதில் நடிக்கும் கலைஞரின் தேர்வு என்பது மிக முக்கியமானது. ஸ்ரீதேவி போன்ற பெரிய நடிகையை, எளிமையான ஒரு படத்தில் நடிக்கவைத்தால் அது நன்றாக இருக்காது. தன்னோடு நடிக்க, ஸ்ரீதேவியை ஓரிரு படங்களில் சிலர் வற்புறுத்தியதாகவும், ஆனால் நான் வேண்டாம் என்று கூறியதாகவும் பாலகிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்