'கோட்' - சிறப்பு காட்சிக்கு நெருக்கடி?

3 புரட்டாசி 2024 செவ்வாய் 13:46 | பார்வைகள் : 6233
‘கோட்’ படத்திற்கு 9 மணி காட்சி திரையிட அனுமதி கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 80 சதவீத திரையரங்குகள் சிறப்பு காட்சியை ரத்து செய்து விட்டதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் தமிழகம் தவிர புதுவை, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணி, 7 மணி காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக முதல் காட்சி 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் 9 மணி காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விநியோகிஸ்தர்கள் சிறப்பு காட்சிக்கு ஒரு டிக்கெட்டுக்கு 700 முதல் 800 ரூபாய் வரை கேட்பதாகவும் இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்து சிறப்பு காட்சியை ரத்து செய்து விட்டதாகவும் தமிழகத்தில் உள்ள 80 சதவீத திரையரங்குகளில் 9 மணி சிறப்பு காட்சி திரையிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது விநியோகிஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஒருவேளை விநியோகிஸ்தர்கள் கேட்கும் தொகை குறைக்கப்பட்டால் சிறப்பு காட்சி திரையிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3