Paristamil Navigation Paristamil advert login

ஒன்றார்யோவில்  தீ விபத்து - ஒருவர் பலி

ஒன்றார்யோவில்  தீ விபத்து - ஒருவர் பலி

3 புரட்டாசி 2024 செவ்வாய் 11:49 | பார்வைகள் : 7174


ஒன்றாரியோ மாகாணம் மிட்லாந்து பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 39 வயதான நபர் ஒருவர் இவ்வாறு தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் வீடு ஒன்றில் தீ பிடித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாகாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் ஒரு பகுதியில் நபர் ஒருவர் வீழ்ந்து கிடந்ததாகவும் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

வர்த்தக‌ விளம்பரங்கள்