இலங்கையில் மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்
 
                    3 புரட்டாசி 2024 செவ்வாய் 10:40 | பார்வைகள் : 13046
அவிசாவளை, கெடஹெத்த பகுதியில் கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திவுரும்பிட்டிய, கெடஹெத்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
கணவன் மனைவிக்கிடையிலான குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அவிசாவளை, பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
 
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan