Paristamil Navigation Paristamil advert login

சிகாகோ சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

சிகாகோ சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

3 புரட்டாசி 2024 செவ்வாய் 05:01 | பார்வைகள் : 5200


தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த் கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ மாகாணத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிகாகோ தமிழ்ச்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடனம், சிலம்பம் என பாரம்பரிய முறைப்படி முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களுடன் முதல்-அமைச்சர் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். சிகாகோவில் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்