Paristamil Navigation Paristamil advert login

ஷாப்பிங், வீட்டு வேலைகளை அசத்தும் NEO பீட்டா ரோபோ

ஷாப்பிங், வீட்டு வேலைகளை அசத்தும் NEO பீட்டா ரோபோ

2 புரட்டாசி 2024 திங்கள் 10:20 | பார்வைகள் : 4353


1X தொழில்நுட்பங்கள் என்ற நிறுவனம் ஷாப்பிங் செய்யக்கூடிய ரோபோ பட்லர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் ரோபோட்டிக் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், 1X Technologies என்ற நிறுவனம் NEO Beta என்ற புதிய ரோபோவை உருவாக்கியுள்ளது.

இந்த NEO பீட்டா வீட்டு வேலைகளை திறமையாக கையாளவும், அதே சமயம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஷாப்பிங் செல்லவும் வடிவமைக்கப்பட்ட ரோபோ இதுவாகும்.

25 கிலோ எடை கொண்ட NEO பீட்டா ரோபோ, 1.65 மீட்டர் உயரம் கொண்டுள்ளது.

இது சந்தையில் உள்ள போட்டியாளர் ரோபோக்களை விட கணிசமாக இலகுவானது.

NEO பீட்டா ரோபோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் வரை தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் NEO பீட்டா ரோபோக்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவு தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்