MS தோனியை மன்னிக்க மாட்டேன்! யுவராஜ் சிங் தந்தை ஆவேசம்
2 புரட்டாசி 2024 திங்கள் 10:02 | பார்வைகள் : 4586
எம்.எஸ் தோனியை மன்னிக்க மாட்டேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களான M.S தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களாக திகழ்வதோடு சிறந்த நண்பர்களாவும் அறியப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் யுவராஜ் சிங் வழங்கிய நேர்காணல் ஒன்றில், தோனியும், நானும் தொழில்முறை நண்பர்களே தவிர தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்கள் கிடையாது என்று தெரிவித்து இருந்தார்.
இது தோனி மற்றும் யுவராஜ் சிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எம்.எஸ் தோனியை நான் மன்னிக்க மாட்டேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அதில், எம்.எஸ் தோனி என் மகன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை அழித்து விட்டார். யுவராஜ் இந்திய அணிக்காக மேலும் 5 ஆண்டுகள் விளையாடியிருப்பார் ஆனால் அதை தோனி கெடுத்துவிட்டார் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கம்பீர், சேவாக் போன்றோர் யுவராஜ் சிங் போல் மற்றொரு கிரிக்கெட் வீரர் கிடைக்க மாட்டார் என்று தெரிவித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan