சிக்ஸர்மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன்...!
1 புரட்டாசி 2024 ஞாயிறு 06:34 | பார்வைகள் : 5122
கரீபியன் லீக் தொடரில் நிக்கோலஸ் பூரன் 97 ஓட்டங்கள் விளாச, ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 250 ஓட்டங்கள் குவித்தது.
செயிண்ட் கிட்ஸின் வார்னர் பார்க் மைதானத்தில் St Kitts and Nevis Patriots மற்றும் Trinbago Knight Riders அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற St Kitts அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய Trinbago Knight Riders அணியில் சுனில் நரைன் 19 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஜேசன் ராய் 6 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) வாணவேடிக்கை காட்டினார். மறுமுனையில் ஷக்கெரே பரிஸ் 13 (9) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷம்ஸி ஓவரில் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேசி கார்ட்டி, பூரனுடன் சேர்ந்து அதிரடியில் மிரட்டினார். இந்த கூட்டணி 122 ஓட்டங்கள் குவித்தது.
சிக்ஸர்மழை பொழிந்த பூரன் 3 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார். அவர் 43 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் விளாசினார்.
கார்ட்டி 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் குவிக்க, Trinbago Knight Riders 4 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய St Kitts அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 206 எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக மைக்கைல் லூயிஸ் 38 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்தார். Trinbago Knight Riders தரப்பில் ஜோஷ்வா லிட்டில், சுனில் நரைன், வாக்கர் சலம்க்ஹெல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan