இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

31 ஆவணி 2024 சனி 16:19 | பார்வைகள் : 5568
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.
இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 12 ரூபாவினால் குறைத்து 332 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 377 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அத்துடன் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 307 ரூபாவாகும்.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை எனவும் 202 ரூபாய் என்ற விலையிலேயே அதன் விலை மாற்றமின்றி தொடரும் என் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025