அஜித், சிவா மீண்டும் இணைவார்களா ?.
 
                    31 ஆவணி 2024 சனி 14:57 | பார்வைகள் : 8809
'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' என இரண்டு படங்களில் ஒரே சமயத்தில் மாறி மாறி நடித்து வருகிறார் அஜித். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இந்த வருடத்திற்குள் முடிந்துவிடும். இருந்தாலும் இந்த இரண்டு படங்களில் எது முதலில் வெளியாகும் என்பதில் ஒரு குழப்பம் நீடித்து வருகிறது.
'விடாமுயற்சி' படம்தான் முதலில் வரும் வாய்ப்புள்ளது. ஆனால், எப்போது என்பது படப்பிடிப்பு முடிந்த பிறகே தெரிய வரும். அதே சமயம் 'குட் பேட் அக்லி' படத்தை 2025 பொங்கல் ரிலீஸ் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். 'விடாமுயற்சி' படம் டிசம்பரில் வெளியாகுமா என்பது இனிமேல்தான் தெரியும். ஒருவேளை அப்படி நடந்தால் அடுத்தடுத்து அஜித் படங்களின் வெளியீடு இருக்கும்.
அதற்கடுத்து அஜித்தின் 64வது படமாக உருவாகப் போகும் படத்தின் பேச்சுவார்த்தை இப்போதே ஆரம்பமாகிவிட்டது என கோலிவுட் வட்டாரத் தகவல். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அது நடக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சிவா இயக்கத்தில் ஏற்கெனவே, “வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்' ஆகிய படங்களில் அஜித் நடித்துவிட்டார். சிவாவுக்காக அஜித் நடிக்கலாம் என்கிறார்கள். இப்போது பேச்சுவார்த்தை முடிந்தால்தான் ஜனவரியில் படப்பிடிப்பை ஆரம்பித்து அடுத்த வருட பிற்பாதியில் படத்தை வெளியிட முடியும்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan