Pau நகருக்கான விமான சேவைகளை இரத்துச் செய்துள்ள Transavia !
30 ஆவணி 2024 வெள்ளி 17:16 | பார்வைகள் : 15451
பிரான்சின் தென்மேற்கு நகரமான Pau மற்றும் பரிசை இணைக்கும் Transavia விமான சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், கொவிட் 19 காலத்துக்கு முன்னர் வாரத்துக்கு 12 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் தற்போது வாரத்துக்கு 7 விமான சேவைகளாக குறைக்கப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
300,000 பயணிகள் இந்த சேவைகளை பயன்படுத்தியிருந்த நிலையில், தற்போது 90,000 ஆக அது குறைவடைந்துள்ளதாகவும், இதனால் குறித்த சேவையினை இலாபகரமாக இயக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் TGV தொடருந்து சேவைகளை பயன்படுத்த முடியும் எனவும், பரிசில் இருந்து Pau நகருக்கு 3 மணிநேரத்தில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan