Paristamil Navigation Paristamil advert login

 புடின் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 

 புடின் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 

30 ஆவணி 2024 வெள்ளி 15:47 | பார்வைகள் : 8380


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடின் மீது  கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையிலும், அந்த அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள நாடொன்றிற்கு துணிச்சலாக பயணிக்க உள்ளார்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் எதற்காவது புடின் சென்றால், அந்த நாடு அவரைக் கைது செய்ய முடியும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று மங்கோலியா. அடுத்த வாரம் மங்கோலியாவுக்குச் செல்கிறார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.

அதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையிலும், அந்த அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள மங்கோலியாவுக்கு பயணிக்க உள்ளார் புடின்.


சோவியத் யூனியனும் மங்கோலியாவும் இணைந்து ஜப்பானுக்கு எதிராக போரிட்ட Battles of Khalknin Gol என்று அழைக்கப்படும் போரின் 85ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புடின் மங்கோலியாவுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்