வவுனியாவில் கடத்தப்பட்ட பெண் - பளையில் மீட்பு - அதிரடியாக செயற்பட்ட பொலிஸார்
30 ஆவணி 2024 வெள்ளி 12:19 | பார்வைகள் : 6433
வவுனியாவில் கடத்தப்பட்ட குடும்பப் பெண்ணெருவரை விரைந்து செயல்பட்ட பொலிஸார் மீட்டு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் நால்வர் நேற்று கைது செய்துள்ளனர்.
வவுனியா, கொக்குவெளி பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்த கும்பல் கடத்திச் சென்றதாக அப்பெண்ணின் மாமியார் செய்த முறைப்பாட்டுக்கமைய அக்கும்பலைக் கைதுசெய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தலைமை காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த வாகனம் சென்ற பாதையில் பின்தொடர்ந்து சென்று அதனை பளை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்ததுடன், குறித்த பெண்ணையும் மீட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த பெண்ணை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan