Paristamil Navigation Paristamil advert login

’கோட்’ திரைப்படம் தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய வெங்கட் பிரபு

’கோட்’ திரைப்படம் தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய வெங்கட் பிரபு

30 ஆவணி 2024 வெள்ளி 09:15 | பார்வைகள் : 8813


தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன்பதிவுகளும் தொடங்கிவிட்டது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’கோட்’ படம் குறித்து நெட்டிசன் ஒருவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் ’எஸ்ஏசி பையன், தியாகராஜன் பையன் , சுந்தரம் மாஸ்டர் பையன், மலேசியா வாசுதேவன் பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பசங்க, கல்பாத்தி அகோரம் பொண்ணு இணைந்து மிரட்டும் ’கோட்’ என்று கிண்டலாக பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு ’நன்றி பிரதர், உங்க அப்பா பெயர் சொல்லுங்க, அவருக்கும் நன்றி சொல்லி விடுகிறேன்’ என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்