கடலில் இருந்து 77 அகதிகள் மீட்பு!

30 ஆவணி 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 6817
ஒருவார இடைவெளியின் பின்னர் மீண்டும் அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 77 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டனர்.
பா-து-கலே மாவட்டத்தின் Dunkerque பகுதியில் இருந்து கடல்மார்க்கமாக 77 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளது. இந்த அதிகாலை பயணத்தை கண்காணித்த பிரெஞ்சு கடற்படையினர், அவர்களின் ஆபத்தான பயணத்தை தடுத்து நிறுத்தி, அவர்களை மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.
கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமையில் இருந்து 26 ஆம் திகதி வரையான ஏழு நாட்கள் எந்த ஒரு அகதிகளும் கடற்பயணம் மேற்கொள்ளாமல் இடைவேளை விட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.