நாட்டுக்குத்தேவையான சிறந்த முடிவை எடுக்க பாடுபடுகிறேன். புதிய பிரதமர் குறித்து மக்ரோன்!
30 ஆவணி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 9771
புதிய பிரதமரை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மனம் திறந்துள்ளார். நாட்டுக்குத் தேவையான சிறந்த முடிவை எடுக்கவே நான் முயற்சிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
”நான் சரியான நேரத்தில் சரியான கட்டமைப்பில் பிரெஞ்சு மக்களுடன் பேசுவேன். நாட்டிற்கு சிறந்த தீர்வை அடையவே பாடுபடுகிறேன்!” என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் பிரான்சில் இருந்து இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சேபியா சென்றிருந்த மக்ரோன், அங்கு வைத்து ஊடக சந்திப்பில் கலந்துகொண்டார். அதன் போதே இதனைத் தெரிவித்தார்.
மக்ரோனின் காலதாமதமான முடிவுகள் அரசியல் கட்சிகளின் கோபத்தை தூண்டியுள்ளன. குற்றப்பிரேரணை கொண்டுவரும் அளவுக்கு அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan