Paristamil Navigation Paristamil advert login

கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகர் சம்பத் ராம் நடந்தது என்ன?

கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகர் சம்பத் ராம்  நடந்தது என்ன?

28 ஆவணி 2024 புதன் 14:06 | பார்வைகள் : 3995


தமிழ் திரையுலகில் வில்லன், குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் சம்பத் ராம், தூர்தர்ஷன் தொடரில் அறிமுகம் ஆகி, ஷங்கர் இயக்கத்தில் உருவான ’முதல்வன்’ திரைப்படத்தில் சப் இன்ஸ்பெக்டர் கேரக்டரின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதனை அடுத்து கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்துள்ள இவர் பெரும்பாலும் வில்லன் ரோல் அல்லது போலீஸ் ரோலில் நடித்துள்ளார். 75க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சம்பத் ராம் சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் சம்பத் ராம், சென்னை கிண்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியதில் காரின் பின்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த நிலையில் காரில் பயணம் செய்த சம்பத் ராம் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் அவர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்