€20 பில்லியன் யூரோக்கள் செலவில்.. மெற்றோவில் புதிய வசதிகள்..!
27 ஆவணி 2024 செவ்வாய் 08:11 | பார்வைகள் : 11775
பரா ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில், பரிசியன் மெற்றோ சேவைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள சில புதிய மெற்றோ நிலையங்களை சக்கரநாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவான வசதிகள் உள்ளன. ஆனால் பல பழைய மெற்றோ நிலையங்களில் அந்த வசதி இல்லை. இந்நிலையில், அனைவருக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் மெற்றோ நிலையங்களை மாற்றும் கோரிக்கை ஒன்றை இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse முன்வைத்தார்.
அரசிடமும், பரிஸ் நகரசபையிடமும் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அனைத்து மெற்றோ நிலையங்களிலும் சக்கரநாற்காலி பயன்படுத்துபவர்கள், பார்வையற்றவர்கள் போன்றோர் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் நிலையங்களில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என தெரிவித்தார்.
இந்த மாற்றத்துக்காக €20 பில்லியன் யூரோக்கள் நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது..






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan