உக்ரைன் மீது 100 ராக்கெட்டுகள், 100 ஆளில்லா விமானங்களை ஏவிய ரஷ்யா

27 ஆவணி 2024 செவ்வாய் 06:40 | பார்வைகள் : 6937
உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ரஷ்யா முன்னேறி சென்று தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு பாலிஸ்டிக் ரக மற்றும் நவீன ராக்கெட்டுகள் கொண்டும் தாக்குதல் தொடர்ந்தது.
உக்ரைனின் தலைநகர் கீவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் கேட்டன. அந்நகரில் சில பகுதிகளில் மின் விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டது.
இதனை உக்ரைனின் விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் நள்ளிரவு தாக்குதல் மற்றும் அதிகாலையிலும் தொடர்ந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதில், பல்வேறு வகைகளை சேர்ந்த 100 ராக்கெட்டுகள், 100 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன. உக்ரைனின் கார்கீவ், கீவ் மற்றும் ஒடிசா உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைனின் 15 பகுதிகள் என ஏறக்குறைய உக்ரைனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டிடங்கள், எரிசக்தி உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025