புதிய பிரதமர் யார்..? - மரீன் லு பென் - ஜனாதிபதி சந்திப்பு..!
26 ஆவணி 2024 திங்கள் 16:41 | பார்வைகள் : 12231
பொதுத்தேர்தல் இடம்பெற்று ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள நிலையில், நாட்டின் புதிய பிரதமர் தொடர்பில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் இழுபறி தொடர்கிறது. இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மரீன் லு பென் தரப்பினருக்கும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தரப்பினருக்கும் இடையே இடம்பெற்றது.
இன்று காலை மரீன் லு பென் மற்றும் ஜோர்தன் பார்தெல்லா ஆகிய இருவரையும் ஜனாதிபதி தனது எலிசே மாளிகையில் வைத்து சந்தித்து உரையாடினார். புதிய பிரதமரை அறிவிப்பதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஒரு கருத்துப்பகிர்வு நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் படியும், அனைவரது கருத்துக்களை கேட்கும்படியும் மரீன் லு பென் மக்ரோனிடம் கோரினார்.
தற்போது பிரெஞ்சு சபாநாயகர் Yaël Braun-Pivet எலிசே மாளிகையை வந்தடைந்துள்ளார். அவருடன் செனட் சபை தலைவர் Gérard Larcher உடன் வருகை தந்துள்ளார். ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
புதிய பிரதமரை நியமிப்பதில் தற்போதுள்ள குழப்பம் போன்று பிரான்சில் முன்னர் எப்போதும் நிகழ்ந்ததே இல்லை என அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan