இலங்கையில் 97 வயதில் முதுமாணிப்பட்டம் பெற்ற மூதாட்டி

26 ஆவணி 2024 திங்கள் 11:03 | பார்வைகள் : 4992
இலங்கையில் 97 வயது மூதாட்டி ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் லீலாவதி தர்மரத்ன என்ற மூதாட்டி பௌத்த கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இளந்தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழும் அவர் பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல” என தெரிவித்துள்ளார்.
லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாகவும் நோட்டரி அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.