Paristamil Navigation Paristamil advert login

 நாடு திரும்பிய  வட கொரியா ஒலிம்பிக்  வீரர்கள் மீது நடவடிக்கை

 நாடு திரும்பிய  வட கொரியா ஒலிம்பிக்  வீரர்கள் மீது நடவடிக்கை

26 ஆவணி 2024 திங்கள் 05:00 | பார்வைகள் : 7080


2024 பாரிஸ் ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற வட கொரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து சிரித்தபடி செல்ஃபி எடுத்ததால் சிக்கலில் மாட்டியுள்ளனர். 

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்ற பிறகு மேடையில் தென் கொரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வட கொரியா திரும்பியுள்ள அனைத்து வீரர்களுக்கும் வெளிநாட்டு கலாச்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கருத்தியல் ரீதியான மனோதத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

மேலும் கட்டுப்பாட்டை மீறி எதிரி நாடான தென் கொரியா வீரர்களுடன் சிரித்ததற்காக டேபிள் டென்னிஸ் வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்