Paristamil Navigation Paristamil advert login

இனி 20 போட்டோ வீடியோக்களை பதிவிட முடியும் - இன்ஸ்டாகிராம்

இனி 20 போட்டோ வீடியோக்களை பதிவிட முடியும் - இன்ஸ்டாகிராம்

26 ஆவணி 2024 திங்கள் 04:08 | பார்வைகள் : 7871


உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. 

இந்த செயலில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம் மற்றும் வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். 

இந்த எண்ணிக்கையை தற்போது 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியுள்ளது

இதன்மூலம் பயனாளர்கள் ஒரே பதிவில் 20 போட்டோக்கள் அல்லது வீடியோக்களை பதிவிட முடியும்.

இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்