ரஜினியுடனான போட்டியை தவிர்கின்றாரா சூர்யா?
26 ஆவணி 2024 திங்கள் 02:58 | பார்வைகள் : 8157
அக்டோபர் 10 ஆம் தேதி ரஜினி நடித்துள்ள வேட்டையன் மற்றும் சூர்யாவின் கங்குவா படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.லைகா நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதால் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இதேபோன்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட கங்குவா படத்தின் ட்ரெய்லர் யூ டியூபில் தமிழில் மட்டும் 32 மில்லியன் பார்வையை கடந்துள்ளது.இந்தி, தெலுங்கு மொழிகளிலும் கங்குவா படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், அதிக பொருட் செலவில் உருவாக்கப்பட்ட கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்றும், நவம்பர் மாதம் வெளியாகலாம் எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
வேட்டையன், கங்குவா என 2 படங்களும் நல்ல வசூலை குவிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால், கங்குவா திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


























Bons Plans
Annuaire
Scan