Paristamil Navigation Paristamil advert login

பரா ஒலிம்பிக் - பரிஸ் வருகிறார் ஜாக்கிச் சான்..!

பரா ஒலிம்பிக் - பரிஸ் வருகிறார் ஜாக்கிச் சான்..!

25 ஆவணி 2024 ஞாயிறு 15:48 | பார்வைகள் : 9645


ஓகஸ்ட் 28 ஆம் திகதி இடம்பெற உள்ள ஒலிம்பிக் ஆரம்பநாள் நிகழ்வில் பிரபல திரைப்பட நடிகர் ஜாக்கி சான் கலந்துகொள்ள உள்ளார்.

பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வு புதன்கிழமை இரவு 8 மணி முதல் 11 மணி வரை மிக பிரம்மாண்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுகளின் ஒரு அங்கமாக தற்காப்பு கலைகளின் 'மாஸ்ட்டர்' என அழைக்கப்படும் நடிகர் ஜாக்கிச் சான் கலந்துகொள்கிறார்.

அவர் ஒலிம்பிக் தீபத்தினைச் சுமந்து மேடைக்கு வர உள்ளதாக அறிய முடிகிறது.

அவருடன், பிரெஞ்சு திரைப்பட நடிகை Elsa Zylberstein, நகைச்சுவை நடிகர் Jarry அவருடன் நடன இயக்குனர் Benjamin Millepied ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்