மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் கணவரின் விபரீத முடிவு
25 ஆவணி 2024 ஞாயிறு 11:32 | பார்வைகள் : 5964
மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் 26 வயதுடைய கணவர் வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் இளம் தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்தப்போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு உயிரிழந்தமை பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.
சிந்துஜாவின் கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan