பிரேசில் நாட்டில் விஷப்பாம்புடன் மருத்துவமனைக்குள் நுழைந்த நபரால் பரபரப்பு
24 ஆவணி 2024 சனி 08:52 | பார்வைகள் : 6740
பிரேசில் நாட்டில், கையில் விஷப்பாம்பு ஒன்றைப் பிடித்துக்கொண்டு மருத்துவமனை ஒன்றிற்குள் நுழைந்த ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேசில் நாட்டில், வேலை செய்யுமிடத்தில் பாம்பொன்று இருப்பதைக் கண்ட ஒருவர், அதை பிடிக்கமுயன்றபோது அது அவரது கையில் கொத்தியுள்ளது.
உடனே, அந்தப் பாம்பைப் பிடித்த அவர், அதை கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர், கையில் பாம்புடன் மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அது என்ன பாம்பு என்று தெரிந்தால், அதற்கான சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால், தான் அந்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அது, jararaca என்னும் ஒரு வகை நச்சுப்பாம்பு ஆகும்.
ஆனால், இந்த jararaca பாம்புகளால் சமீப காலமாக மனிதர்களுக்கு பல நன்மைகள் நிகழ்ந்துள்ளன என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
மனிதர்களுக்கு உயர் இரத்த அழுத்தத்துக்கான முதல் மருந்தைக் கண்டுபிடிக்க இந்த பாம்பின் விஷம்தான் உதவியதாம்.
அத்துடன், இதய செயலிழப்பு வரையிலான சில இதய பிரச்சினைகளுக்கான மருந்துகள் கண்டுபிடிப்பிலும் இந்த jararaca பாம்பின் விஷம் உதவியாத அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan