செங்கடலில் கப்பலில் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

24 ஆவணி 2024 சனி 07:18 | பார்வைகள் : 7101
செங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.
அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், செங்கடல் வழியாக சென்ற 1 லட்சத்து 50 ஆயிரம் டன் எடை கொண்ட கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கிரீஸ் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.
இந்த கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து கப்பலை கைவிட்டுவிட்டு சிப்பந்திகள் வெளியேறினர். இந்த நிலையில், செங்கடலில் நின்று கொண்டிருந்த இந்த கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தினார்களா? என்ற விவரம் வெளியாகவில்லை.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025