ஒன்றாரியோ கோர விபத்து - ஒருவர் பலி
23 ஆவணி 2024 வெள்ளி 10:59 | பார்வைகள் : 5885
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸஸ்சாகா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மிஸஸ்சாகாவின் 401ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.
இரவு 8.30 மணி அளவில் வெஸ்ட்பவுண்ட் எக்ஸ்பிரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் வாகனத்தில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்த விபத்து காரணமாக குறிப்பிட்ட சில நேரம் வீதிகள் மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan