ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் வெளியாகிய தகவல்

23 ஆவணி 2024 வெள்ளி 05:25 | பார்வைகள் : 9745
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை ஈரான் அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அவர்கள் குறித்த விபத்தில் பலியாகியுள்ளார்.
அதன்படி சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடந்த குறித்த விபத்தில் ஈரான் அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் தாக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற தொந்தரவுகள் ஏற்பட்டதா என்பது தெரியவரவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அஜர்பைஜான் எல்லைக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியபோது, விமானத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரண்டு பேர் அதிகம் பயணித்திருந்தமை தெரியவந்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025