பரபரப்பை ஏற்படுத்திய ஆண்ட்ரியாவின் "பிசாசு 2" - ரிலீஸ் ஆகுமா?
22 ஆவணி 2024 வியாழன் 15:15 | பார்வைகள் : 9923
கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிசாசு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை அந்த திரைப்படம் பெற்றது. இந்த சூழலில் தான் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சில வருடங்களுக்கு முன்பு எடுக்கத் தொடங்கினார் மிஷ்கின். நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த அந்த திரைப்படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்து, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்படத்தில் வரும் ஒரு காட்சியில், பிரபல நடிகை ஆண்ட்ரியா ஆடையின்றி நிர்வாணமாக நடித்திருப்பதால், அப்பிடத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழ் வழங்கியது. உடனடியாக அப்படத்தை தயாரித்த நிறுவனம், அதை வெளியிட தயங்கியது. மேலும் அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டு அப்படம் வெளியாகும் என்றும் நம்பப்பட்டது.
ஆனால் அதன் பிறகு "துப்பறிவாளன்" மற்றும் "சைக்கோ" என்று இரு திரைப்படங்களை இயக்கி முடித்த மிஷ்கின், தற்பொழுது டிரெயின் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் கூட பிசாசு 2 வெளியாகவில்லை. இந்நிலையில் பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசிய மிஷ்கின், படத்தின் தயாரிப்பாளர் ஆரம்ப கட்டத்தில் இப்படத்தை வெளியிட சற்று பயந்து வந்தார். ஆனால் தற்பொழுது பல மாற்றங்கள் படத்தில் செய்யப்பட்டு வருகிறது, ஆகவே இந்த ஆண்டுக்குள் அல்லது 2025ம் ஆண்டு பிசாசு 2 திரையரங்குகளில் வெளியாகும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan