பா ரஞ்சித் அடுத்த படத்தில் சூர்யா இணைகிறாரா?
22 ஆவணி 2024 வியாழன் 15:14 | பார்வைகள் : 6216
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில் அவருடைய அடுத்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர்தான் நடிகர் சூர்யா.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த செய்தி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ’ஜெர்மன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் ’தங்கலான்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஞானவேல் ராஜா ’ஒரு பெரிய நடிகரின் கால்ஷீட்டோடு வருகிறேன், மீண்டும் நாம் இணைந்து படம் எடுக்கலாம்’ என்று கூறி இருந்தார். அப்போதே அவர் சூர்யா தான் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
பா ரஞ்சித் - சூர்யா இணையும் ஜெர்மன் என்ற திரைப்படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ’சூர்யா 44’ படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் பா ரஞ்சித் படத்தின் பேச்சுவார்த்தையும் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan