Val-de-Marne : காவல்துறையினர் மற்றும் காவல்நிலையம் மீது தாக்குதல்..!
22 ஆவணி 2024 வியாழன் 15:01 | பார்வைகள் : 14324
நேற்று புதன்கிழமை மாலை Boissy-Saint-Léger (Val-de-Marne) நகர காவல்நிலையம் மீது மோட்டார் பட்டாசு மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினரும் தாக்குதலுக்கு இலக்காகினர்.
குறித்த காவல்நிலையத்தை சூழ்ந்துகொண்ட சிலர் சிறிய பீரங்கி போல காட்சியளிக்கும் மோட்டார் பட்டாசுகளினால் காவல்நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டனர். தாக்குதலை முறியடிக்க வெளியே வந்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் தங்களது கலவரம் அடக்கும் துப்பாக்கியினால் (LBD என அழைக்கப்படும் இறப்பர் குண்டுகளாலான துப்பாக்கியாகும்) அவர்கள் சுட்டனர். ஒருமணிநேரத்துக்கும் மேலாக இந்த பரபரப்பு நீடித்தது.
யாரும் காயமடைந்ததாக பதிவுசெய்யப்படவில்லை.

























Bons Plans
Annuaire
Scan