Paristamil Navigation Paristamil advert login

விமானத்தில் வெடிகுண்டு புரளி.. பயணிகள் வெளியேற்றம்..!!

விமானத்தில் வெடிகுண்டு புரளி.. பயணிகள் வெளியேற்றம்..!!

22 ஆவணி 2024 வியாழன் 09:59 | பார்வைகள் : 6616


ஓர்லி சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக எழுந்த புரளியினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நேற்று ஓகஸ்ட் 21, புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. இரவு 8 மணி அளவில் குறித்த விமான நிலையத்துக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அடுத்தே ஓர்லியில் இருந்து Montpellier நகர் நோக்கி பறக்க இருந்த உள்ளூர் விமானம் ஒன்றே நிறுத்தப்பட்டது.

பயணிகள் வெளியேற்றப்பட்டு, விமானம் சோதனையிடப்பட்டது. இந்த நடவடிக்கை மூன்றுமணிநேரம் நீடித்ததால் அதன் பின்னர் விமானம் இயக்கப்படவில்லை. இரத்துச் செய்யப்பட்டது. 

விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்