Paristamil Navigation Paristamil advert login

பாபர் அசாமிற்கு பயத்தை காட்டிய வீரர்- வங்காளதேசத்திடம் தடுமாறும் பாகிஸ்தான் அணி

பாபர் அசாமிற்கு பயத்தை காட்டிய வீரர்- வங்காளதேசத்திடம் தடுமாறும் பாகிஸ்தான் அணி

22 ஆவணி 2024 வியாழன் 09:54 | பார்வைகள் : 3407


வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. 

ராவல்பிண்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்று வங்காளதேசம் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் 2 ஓட்டங்களில் அப்துல்லா ஷாஃபிக் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஷான் மசூட் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சோரிஃபுல் பந்துவீச்சில் வெளியேறினார். 

பின்னர் வந்த பாபர் அசாம் (Babar Azam) 2 பந்துகளில் ரன் எடுக்காமல் சோரிஃபுல் ஓவரில் லித்தன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்