நடிகர் அமீர் கானுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?
20 ஆவணி 2024 செவ்வாய் 11:19 | பார்வைகள் : 7121
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் இந்தி சினிமா முன்னணி நடிகர் ஆமிர் கானை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கைதி, விக்ரம், லியோ படங்களின் மூலம் கவனம் பெற்ற லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மீது எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களை தனது சினிமாட்டிக் யூனிவர்சுக்குள் கொண்டு வந்திருந்தார்.
ஆனால் ரஜினியை வைத்து இயக்கும் கூலி திரைப்படம் ஸ்டாண்ட் அலான் படமாக இருக்கும் என்று லோகேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அவர் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆமீர் கானும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. சந்திப்பின்போது இருவரும் இணைந்து படம் பண்ணுவதற்கு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முன்னதாக தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை கொடுத்தார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதிப்பாக வசூலித்து இருந்தது.
இந்நிலையில் மற்றொரு தமிழ் சினிமா இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் ஆமிர் கான் இணையலாம் என்று பிரபல இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்திற்காக 2-3 ஆண்டுகள் ஆமீர்கான் கடுமையாக உழைத்தார். இருப்பினும் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. இந்த நிலையில் ஆமிர் கான் – லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்தால் அது ஆமீர் கானுக்கு கம்பேக்காக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan